ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
நடிகர் சங்கம் சார்பில் விரைவில் நடைபெறவிருக்கும் பொன்விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகர் சங்க பிரதிநிதி ஒருவர் டில்லி சென்று ராகுலை சந்தித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை. நடிகர் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு ராகுலை அழைப்பதற்காகத்தான் நடந்தது என்கிறது நடிகர் சங்க வட்டார தகவல்கள்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் ராகுலும் நடிகர் சங்க விழாவில் கலந்து கொள்வார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவாதாக தகவல்கள் செய்திகள் வெளியானதும், நடிகர் விஜய் ராகுலை சந்தித்து அரசியல் குறித்து பேசியதும், இளம் நடிகர்கள் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று ராகுல் பேட்டியளித்ததும் குறிப்பிடத்தக்கது. நடிகர்-நடிகைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது ; அரசியல்வாதிகளுக்கும் நடிகர்- நடிகைகளின் தயவு தேவைப்படுகிறது. சினிமாவில் அரசியல் ; அரசியலில் சினிமா! என்ன செய்ய?