பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக முனி 3 கங்கா என்று மூன்றாவது பாகத்தை வேக வேகமாக தொடங்கினார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக அப்படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நேரத்தில் அப்படத்துக்கு அவர் காஞ்சனா-2 என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காஞ்சனா தனது சினிமா கேரியரில் மாபெரும் வெற்றி படம் என்பதால் இந்த டைட்டிலை வைக்க லாரன்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், காஞ்சனா படத்தில் முக்கிய காமெடி வேடங்களில் நடித்திருந்த கோவை சரளா-தேவதர்ஷினி இருவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் படம் முழுக்க வருகிறார்களாம். அதோடு முதல் பாகத்தை விட, 2ம் பாகத்தில் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ். அதனால், கோவை சரளா-தேவதர்ஷினி இருவருமே இந்த படம் திரைக்கு வந்தால் தங்களது காமெடி கூட்டணிக்கு மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.