ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தனுஷ் நடிப்பில் இயக்கிய படம் அனேகன். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனேகன், நடிகருக்கான படம் இல்லை இயக்குனருக்கான படம் என்று சினிமா துறையை சார்ந்தவர்கள் பேச தொடங்கியுள்ளனர். இதைத்தான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது. அதே நேரத்தில் நடிகருக்கான இடத்தையும் தனுஷூக்கு வாங்கி கொடுத்துள்ளது. அவரின் உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தை தொடங்கிவிட்டார், இதற்காக கே.வி.ஆனந்த் மற்றும் அவரது கதை விவாத குழுவினர், மலையும் காடும் சார்ந்த பகுதியான ஏற்காடு சென்றுள்ளனார். இதை வைத்து பார்க்கும்போது ஆனந்தின் அடுத்த படம் குறிஞ்சி நிலப்பகுயை தழுவி உருவாகலாம் என்கிறார்கள்.