இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தவர் கலையரசன். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தபடியாக பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி விட்டார். அதாவது ஜிகர்தண்டாவிற்கு பிறகு எப்படி பாபி சிம்ஹா ஹீரோவாக பிசியாக விட்டாரோ அதேபோன்று கலையரசனும் பிசியாகி விட்டார்.
அதனால் உடல் எடையை இன்னும் குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் கலையரசன். இந்த நேரத்தில் அவருக்கு சைக்கிள் பயிற்சி முக்கியமாக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் கூறினார்களாம். அதை தெரிந்து கொண்ட அவரது மனைவி ப்ரியா ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கேனான் டேல் என்ற ரக சைக்கிளை வாங்கி கலையரசனுக்கு பரிசளித்தாராம்.