இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
'பாய்ஸ்' படத்தில் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் சித்தார்த். 2003ம் ஆண்டிலிருந்து நாயகனாக நடிக்க ஆரம்பித்த சித்தார்த் தொடர்ந்து தெலுங்கில் 13 படங்களிலும், ஹிந்தியில் 3 படங்களிலும், தமிழில் 9 படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். மார்ச் மாதம் வெளியாகவுள்ள 'எனக்குள் ஒருவன்' படம் அவருடைய 25வது படமாக வெளியாகவுள்ளது. 12 ஆண்டுகளில் 25 படம் என்பது குறைவான எண்ணிக்கைதான் என்றாலும் கண்டபடி எந்தப் படங்களிலும் நடிக்காமல் தனது மார்க்கெட்டை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். ஆனால், தமிழில் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், அபாரமான வெற்றிப் படங்களிலும் இன்னும் அவரால் நடிக்க முடியாமலே இருக்கிறது. அந்தக் குறையை 'எனக்குள் ஒருவன்' போக்கிவிடும் என்று நம்புகிறார்.
“எனக்கும் ஆக்ஷன் ஹீரோ மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைதான். ஆனால், கதையை ரெடி பண்ணிட்டு, என்னை நடிக்க வைக்கலாம்னு வர்றவங்க, அப்படியே பாதி வழியிலேயே போயிடறாங்க. அந்த மாதிரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் எனக்கு தரவே மாட்டேங்கிறாங்க. இன்னும் என்னை ஃபாரின்ல ஏதாவது ஒரு பொண்ணுக்கு பூ கொடுக்கிற மாதிரியான கதைகளைத்தான் கொடுக்கறாங்க. ஒரு வேளை அப்படி ஒரு ஆக்ஷன் கதாபாத்திரம் எனக்கு இனிமேல்தான் தருவாங்க, அதுக்கு நம்ம தோற்றம் சரியா செட் ஆகலையோன்னு நினைக்கிறேன்.
“எனக்குள் ஒருவன்' படத்தை கிரிக்கெட் வேர்ல்ட் கப் நடக்கும் போதும், பரீட்சை நடக்கும் போதும் வெளியிடுறீங்களேன்னு கேட்டாங்க. வர்ற வாரம் பெரிய ஹீரோ நடிக்கிற படம், பெரிய தயாரிப்பாளரோட படம் வருது. அந்தப் படத்துக்கப்புறமா எங்க படம் வர்றதும் எங்களுக்கு பாதிப்பா இருக்காது. எங்க படம் ஹிட் ஆச்சின்னா தொடர்ந்து இனி மார்ச் மாசம் படங்களை ரிலீஸ் பண்றதுக்கு நாங்க முன்னோடியே இருக்கிறோமே,” என்றார்.
சித்தார்த் சொன்ன அந்த ஹீரோ படம் நம்ம சிவகார்த்திகேயன் தான். அவர் நடித்துள்ள காக்கிசட்டை படம் தான் இந்தவாரம், அதாவது பிப்., 27ம் தேதி வௌியாக இருக்கிறது. 25 படங்களில் மூன்று மொழிகளில் நடித்திருந்தாலும், சித்தார்த் பார்வையில் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோவாகவே பார்க்கிறார். இது அவருடைய தன்னடக்கத்தை வெளிப்படுத்துகிறதா அல்லது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை குறிக்கிறதா....?