டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபலமான கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் உதயநிதி. அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டாவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த அவர், அடுத்து தான் நடிக்கும் படத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனுடன் ஜோடி சேருகிறார்.
திருக்குமரன் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் கெத்து என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு மாற்றப்பட இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நண்பேன்டா படம் ஏப்ரல் 2-ந்தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தற்போது தொடங்கி விட்டார் உதயநிதி.