Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளமே வாங்காமல் நடிக்கும் அட்டகத்தி நந்திதா!

22 பிப், 2015 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Nandita-works-free-of-cost-because-of-good-script

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில நடித்திருப்பவர் நந்திதா. இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் இப்போது கோலிவுட்டில் இவர் ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, லட்சுமிமேனனை ராசியான நடிகை என்று சொல்லி வந்தவர்கள் இப்போது இவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.


இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கவர்ச்சி விசயத்தில் தொடர்ந்து நோ சொல்லி வரும் நந்திதா. சம்பள விசயத்தில் கறார் செய்வதில்லை. என் கண்டிசனுக்கு நீங்கள் ஓகே என்றால் நீங்கள் சொல்லும் சம்பளத்தில் நடிக்க நானும் ரெடி என்று கூறி வரும் நந்திதா, தற்போது தனது திறமையை மேலும் வெளிச்சம் போடும் விதமாக உப்புக்கருவாடு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்த நிலையில், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டபோதும், வெயிட்டான கதைகள் பக்கமும் திரும்பி நிற்கும் நந்திதாவிடம், கழுகு கிருஷ்ணா- மா.கா.பா.ஆனந்த் இணைந்து நடித்த வானவராயன் வல்லவராயன் பட்த்தை இயக்கிய ராஜ்மோகன், சமீபத்தில் ஒரு கதை சொன்னாராம்.


அந்த கதையைக்கேட்ட நந்திதா, அசந்து போனாராம். இந்த படத்தில் மட்டும் என்னை நாயகியாக நடிக்க வைத்தால் நான் சம்பளமே வாங்க மாட்டேன் என்றாராம். காரணம், அந்த அளவுக்கு முழுக்க முழுக்க கதாநாயகியை முதன்மைப்படுத்தும் விதத்தில் பக்கா நேட்டிவிட்டியாக அந்த கதை இருந்ததாம். இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் இன்றைய சூழலில் நூறு படங்களில் நடித்ததற்கு சமம். அப்படியொரு கதை இது என்று சொன்னாராம் நந்திதா. அதனால் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டை அவசரகதியில் தயார் செய்து நந்திதாவை அப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ராஜ்மோகன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in