ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதம்மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு நடிகைகள் நடித்தனர். இந்தநிலையில், அடுத்தபடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 56-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவர் டைரக்டர் சிவாவின் செண்டிமென்ட் நாயகி தமன்னாதான் என்று செய்திகள் வெளியானபோதும், தற்போது ஸ்ருதிஹாசனின் பெயர் அடிபடுகிறது. அதோடு, அந்த இன்னொரு நாயகி யாராக இருக்கும் என்பதில்தான் பல யூகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தமன்னாவா? ஹன்சிகாவா? என்று மீடியாக்கள் குழம்பிக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது அந்த இன்னொரு நாயகி வேடத்தில் பிந்துமாதவி நடிப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவியுள்ளது.
அதேசமயம், நான் அஜீத்தின் தீவிரமான ரசிகை. அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று சமீபத்தில் பேட்டி அளித்த பிந்துமாதவி தரப்பில் இருந்துகூட, அஜீத் பட யூனிட்டின் கவனத்தை தன் பக்கம் திருப்ப, இந்த மாதிரி செய்திகளை பரப்பி விட்டிருக்கலாம் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.