மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் அவ்வப்போது நடிகை காவ்யா மாதவன் கால் டாக்சி ஒன்றை ஒட்டிக்கொண்டு செல்வதாகவும் அதில் சில இளம்பெண்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததாகவும் பொதுமக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்ள, விஷயம் மலையாள இண்டஸ்ட்ரியிலும் தீயாக பரவியது.. அதன் பிறகு விசாரித்ததில் தான் தெரிந்தது காவ்யா மாதவன் தற்போது, தான் நடித்துவரும் 'ஷி-டாக்சி' படத்திற்காக கால் டாக்சி ஓட்டியிருக்கிறார் என்பது.. ஷாஜி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக, ஷி-டாக்சி ஓட்டும் ட்ரைவராக நடிக்கிறார் காவ்யா மாதவன்..
காவ்யா மாதவனிடம் ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கிறதே தவிர கார்களை அவ்வளவாக ஓட்டி அவருக்கு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப்படத்தில் ஒரு கைதேர்ந்த ட்ரைவரைப்போல லாவகமாக கார் ஓட்டியிருக்கிறாராம் காவ்யா. கதைப்படி கல்லூரி செல்லும் மூன்று மாணவிகளை தினசரி காரில் ஏற்றிக்கொண்டு சென்று வருவதும் அவரது வேலையில் ஒரு முக்கிய அம்சம்... அப்படி அவர் அந்தப்பெண்களுடன் வண்டி ஓட்டிப்போவதைத்தான் பலரும் பார்த்துவிட்டுத்தான், காவ்யா கால் டாக்சி ஒட்டுகிறாரோ என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.