ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரேணிகுண்டா, மீகாமன், உட்பட ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவற்றில் ரேணிகுண்டா படத்தில் மட்டும் குணசித்திர வேடத்தில் நடித்தார். அதன் பிறகு கவர்ச்சி நடனம் ஆடும் வேடங்கள் தேடிவர, ஐட்டம் டான்ஸ் நடிகையாகிவிட்டார். சஞ்சனா சிங்க கடைசியாக நடித்த மீகாமன் படத்தில் அவரது வேடம் பேசப்பட்டது. மீகாமன் படத்தை தொடர்ந்து ரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சஞ்சனா சிங், தவிர தொடா இஷ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறாராம்! இதிலும் கவர்ச்சி நடனம்தான் ஆடுகிறார்.
சஞ்சனாசிங்குக்கு வருகிற 23-ஆம் தேதி பிறந்த நாள்! அன்றைய தினம் தன் குடும்ப உறுப்பினர்களுடன் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் தனது பிறந்த நாளை படு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளார் சஞ்சனா சிங்! அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற விரும்பிய சஞ்சனா சிங், இன்று காலை சென்னை, வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் கேக்கை வெட்டி பத்திரிகையாளர்களின் வாழ்த்துக்களைப் பெற்றார். அதன் பிறகு சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள லிட்டில் ஃப்ளவர் ஆதரவற்றோர் பள்ளியிலுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதோடு, அங்குள்ள குழந்தைகளுடன் நேரம் செலவிட்டார்.