Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவுண்டமணி!

19 பிப், 2015 - 11:01 IST
எழுத்தின் அளவு:

ரீ-என்ட்ரியில் 49 ஓ, வாய்மை படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, அடுத்தபடியாக நடிக்கும் படம் ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''. இந்த படத்தில் இளமை ததும்பும் கதையின் நாயகனாக நடிக்கிறார் கவுண்டமணி. அதோடு, அவரது காமெடி ரவுசும் அதிக தூக்கலாக இருக்குமாம்.


அப்படம் பற்றி இயக்குனர் கணபதி பாலமுருகன் கூறும்போது, இந்த படத்தில் கவுண்டமணி சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு கேரவன்களை அனுப்பும் உரிமையாளராக நடிக்கிறார்.குறிப்பாக, நான் ஒரு பிஸ்னஸ் பண்ணினா அதுல எல்லாமே நான்தான் இருக்கனும். எனக்கு போட்டியே இருக்கக்கூடாது என்று நினைக்கிற கேரக்டர் கவுண்டமணி. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அர்னால்டு நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதிதாக வளர்ந்து வரும் அட்டகத்தி தினேஷ் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, தன்னுடைய கேரவன்தான் செல்ல வேண்டும் என்று படங்களுக்கேற்ற வண்டிகளை அனுப்பி வருவார்.


அதோடு, அவரது பிராண்ட் டயலாக்குகளும் படம் முழுக்க இடம்பெற்றிருக்கிறது. உதாரணத்துக்கு, இந்தியா வந்த ஒபாமா, சோனியாவை சந்தித்தார், ராகுலை சந்தித்தார். அவர் ஏன் அன்னா ஹசாரேயை சந்திக்கவில்லை. அதனால் ஒபாமாவுக்கு என்னுடைய கண்டனம் என்பார். அதேபோல், ராமசாமி பையன் சீனுவுக்கு என் வாழ்த்துக்கள் என்பார். அது யாருன்னு கேட்டா, அதாண்டா இடம் பொருள் ஏவல்ன்னு அழகான பெயருடன படமெடுக்கிற சீனுராமசாமியைத்தான் சொன்னேன் என்பார். இப்படி படத்துல ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். அதேசமயம் தேவையில்லாமல் யாரையும் வார மாட்டார்.


என்னைப்பொறுத்தவரை இந்த படத்தை ரஜினியை வைத்து ஒரு படம் பண்ற மாதிரிதான் பண்றேன். காரணம் ரஜினி சாருக்கு என்னவொரு பாப்புலாரிட்டியோ அது கவுண்டமணி சாருக்கு இருக்கு. காமெடி சூப்பர் ஸ்டார் அவர். இந்த படத்தில் அவர் பேசும் டயலாக்குகளை இன்றைய ரசிகர்கள் விரும்பும் வகையில் படம் முழுக்க வைத்திருக்கிறேன் என்று கூறும் அவர், இந்த படத்துல தனது கேரவன்ல ஒர்க் பண்றவங்களை கூட்டிக்கிட்டு ஒரு ஜாலி டிரிப் போறாருங்கிற மாதிரிதான கதை. சென்னையில் இருந்து மதுரைக்கு போற ஒரு கேரக்டர் வழியில் சந்திக்கிற பிரச்சினைதான் இந்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் என்கிறார்.


அவரிடத்தில், கவுண்டமணி இந்த படத்தில் இளவட்டமாக வருகிறாரா? இல்லை தனது நிஜ கெட்டப்பிலேயே நடிக்கிறாரா? என்று கேட்டபோது, அவரது வயதுக்கு மேட்சான வேடத்தில்தான் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு திருமண வயதில் ஒரு மகள் இருப்பார். அதோடு, கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க மாஜி ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வருகிறோம். இன்னும் யார் என்பது முடிவாகவில்லை. மற்றபடி, கவுண்டமணி அணியும் காஸ்டியூம்கள் அவரை யூத்தாக காட்டும்.


மேலும், கவுண்டமணி இந்த படத்தில் சர்ச்சைக்குரிய டயலாக்குகளை பேசி நடிப்பது போல் செய்திகள் உலவுகிறது? ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இது ஒரு ஜாலியான படம். சினிமாக்காரர்களையோ, அரசியல்வாதிகளையோ யாரையும் அவர் தாக்கிப்பேசவில்லை. அவர் பேசும் டயலாக்குகள் எல்லாமே காமெடியாகத்தான் இருக்கும். மேலும், காதலுக்காக போராடும் வேடத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறார். அதோடு, ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமிடையே உள்ள பந்தமும் இப்படத்தின் முக்கிய கதையம்சமாகி உள்ளது. அதனால் மற்றவர்கள் நினைப்பது போல் சர்ச்சைக்குரிய விசயங்கள் எதுவும் இந்த படத்தில் இருக்காது. இது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான படமாகவே இருக்கும் என்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in