'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்போது தானே மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி நடிக்க வந்திருக்கிறார், அதுமட்டுமல்ல யாருடைய வம்புதும்புக்கும் போகமாட்டாரே.. அப்படி தடைபோடும் அளவுக்கு என்ன பிரச்சனை என பதட்டமடைய வேண்டாம். பிரச்சனை மஞ்சு வாரியர் படத்திற்குத்தானே அவருக்கு அல்ல. அவராலும் அல்ல. அதேபோல மஞ்சு நடித்து வெளியாகப்போகும் படத்திற்கும் அல்ல.. இது அவர் நடிக்கப்போகும் படத்திற்குத்தான் அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்துள்ளார்கள் தயாரிப்பாளர் சங்கமும் தியேட்டர் ஓனர்கள் சங்கமும். காரணம் படத்தின் இயக்குனர் அருண்குமார் அரவிந்த் தான்.
இவர் இதற்குமுன் இயக்கிய, கடந்த வருட இறுதியில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ஒன் பை ட்டூ' படத்தின் தயாரிப்பாளர் ராகேஷ் என்பவர் தான், தயாரிப்பாளர் சங்கத்தில் முந்தைய படம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து அருண்குமாரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்ல்லாததால் அவர் அடுத்த படத்தை ஆரம்பிக்கும்போதே அதிகாரப்பூர்வமில்லாத தடையை கொண்டுவந்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர், படத்தின் மீதான தடையை விலக்கச்சொல்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். இன்னொரு பக்கம் கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இந்த விவகாரத்தில் அருண்குமாருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது..