தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாராவுக்கும், விக்ரமுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.
நடிகைகளில் நயன்தாரா எப்படியோ.... அதுபோலவே நடிகர்களில் விக்ரம்!
புரியவில்லை... நயன்தாரா எந்த ஹீரோ உடன் சேர்ந்து நடித்தாலும் கிசுகிசுக்கள் வந்துவிடும். கடைசியாக.. உதயநிதி ஸ்டாலின் வரை.
நயன்தாராவைப்போல்தான் விக்ரமும்!
இவர் எந்த நடிகையுடன் இணைந்து நடித்தாலும் அவருடன் நெருக்க்க்க்மாக இருப்பார்.
ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா, அமலாபால் என விக்ரம் உடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் பற்றி பெரிய பட்டியலே போடலாம்.
இப்படிப்பட்ட டிராக் ரெக்கார்டு உள்ள விக்ரமும், நயன்தாராவும் ஒரு படத்தின் இணைந்து நடித்தால் என்னாகும்?
மீடியாக்கள் ஓவர்டைம் போட்டுத்தான் வேலை செய்ய வேண்டும்,
மாயா, நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன் மாஸ், நானும் ரௌடிதான் என அதிகப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, அடுத்து அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தில்தான் நயன்தாராவும் விக்ரமும் சேர்ந்து நடிக்கின்றனர்.!
தற்போது விஜய்மில்டன் இயக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம்!