‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட் திரையுலகில், சன்னி லியோனை விட நான் தான் பெரிய ஸ்டார் என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். இதுகுறித்து, மல்லிகா ஷெராவத் கூறியதாவது, பாலிவுட் திரையுலகில், எல்லா நடிகர், நடிகைக்கும் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. யாருடைய இடத்தையும், வேறுயாராலும் பிடித்துவிட முடியாது. கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தான் தான் பெரிய நடிகை என்று கூறியதாக சமீபத்தில் படித்தேன். அதை கேட்டவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. அவர் வெறும் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு நடித்து வருகிறார். ஆனால், நானோ ரொமான்டிக் காமெடி படமான பியார் கி சைட் எபெக்ட்ஸ் படத்தில் மட்டுமல்லாது, பெரிய நட்சத்திரங்களுடன் வெல்கம், குரு, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். அவர் சொல்படி பார்த்தால், தற்போதைய அளவில், அவரை விட நான் தான் பெரிய ஸ்டார் என்று மல்லிகா ஷெராவத் கூறினார்.