இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகில் நடிகர்களில் சிறந்த திறமையான நடிகராக விளங்கி வரும் விக்ரமும், நடிகைகளில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகையாக விளங்கி வரும் நயன்தாராவும் முதன் முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்தப் படத்தை 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளார். 'ஐ' படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரமைத் தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் அவர் படங்களையும், இயக்குனர்களையும் தேர்வு செய்வதில் கனமாக உள்ளாராம்.
தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 'பத்து எண்றதுக்குள்ளே' படத்தில் நாயகனாக நடித்து வரும் விக்ரம் அடுத்து பலரிடம் கதை கேட்டாலும் ஒரு சில படங்களை மட்டும்தான் நடிப்பதற்குத் தேர்வு செய்துள்ளாராம். பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருந்து வரும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் அடிக்கடி சில இடைவெளிகள் விழுந்தாலும் அவர் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் போது பல நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து அவரை நிலை நிறுத்திக் கொள்கிறார். தற்போது நயன்தாரா, ஆறு தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவை இந்த ஆண்டே ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளன. இந்த வரிசையில் தற்போது விக்ரம் ஜோடியாக நடிக்கும் படமும் இணைய உள்ளது.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படமும் 'அரிமா நம்பி' படம் போவே ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.