'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் நடித்த 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல். மேலும் தமிழில், 'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ' என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன்மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி படங்களில் சறுக்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்துவரும் அஜ்மல் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் 'லோகம்' படம் மூலமாக மலையாள சினிமாவிற்கு திரும்பியிருக்கிறார்.
ரஞ்சித் இயக்கும் இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் அஜ்மல்.. இந்தப்படத்தில் இவருக்கு ஸ்டைலிஷான கதாபாத்திரமாம். அதுமட்டுமல்ல, இவர் ஏற்கனவே மோகன்லாலுக்கு தம்பியாக 'மாடம்பி' என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார். ரஞ்சித்தின் சிஷ்யரான உதய் ஆனந்தன் இயக்கிய 'பிரணயகாலம்' படத்தில் அறிமுகமாகிய அஜ்மல், அந்தப்படத்தில் தான் ஏற்றிருந்த கேரக்டருக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். இப்போது ரஞ்சித் இயக்கத்திலேயே மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பதால் குஷியாகியுள்ளார் அஜ்மல்.