ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம் லூசியா. அதனை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமார், '' எனக்குள் ஒருவன்'' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். சித்தார்த், தீபா சன்னிதி, சிருஷ்டி டாங்கே, நரேன், ஜான் விஜய் நடித்துள்ளார், பிரசாத் ராமர் இயக்கி உள்ளார்.
இந்தப் படம் தயாரித்து முடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. சித்தார்த் நடித்த காவியத் தலைவன் ரிலீசுக்காக இந்தப் பட ரிலீசை தள்ளி வைத்தார்கள். காவியத் தலைவன் சரியாக போகதாதல் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தயக்கம் காட்டினார். தற்போது வருகிற மார்ச் 6ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகிர்தண்டா, என தொடர் வெற்றிகளுக்கு பிறகு காவியத் தலைவன், சித்தார்த்திற்கு சின்ன சறுக்கலை கொடுத்தது. இந்தப் படம் அதனை சரிகட்டிவிடும் என்று சித்தார்த் நம்புகிறார். இதில் ஸ்மார்ட்டான இளைஞனாகவும், அழுக்கான தியேட்டர் ஆபரேட்டராகவும் நடித்துள்ளார். கனவுலகில் வாழும் ஒருவனின் கதை. வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடுகிறது.