ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ரீகாந்த்-விஷ்ணு நடித்த துரோகி படத்தை இயக்கிய சுதா, தற்போது இயக்கும் படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரிதிகா சிங் நடிக்கும் இப்படம் தமிழ், இந்தியில் உருவாகிறது. இந்த நிலையில், இதற்கடுத்து ஒரு படத்தில் நடிப்பதற்கும் மாதவன் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். அந்த படத்தில் நாயகியாக நடிக்க அசினிடம் பேசியுள்ளனர். விஜய்யுடன் நடித்த காவலன் படத்திற்கு பிறகு மீண்டும் அசின் தமிழுக்கு வருவதாக செய்திகள் வெளியானபோதும் அது உண்மையாகவில்லை.
ஆனால், இப்போது இந்தியில் அசினின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால், கண்டிப்பாக தமிழுக்கு வந்து விடுவார் என்று தெரிகிறது. மேலும், மாதவன் நடிக்கிற படம் என்றதும் உடனே காதுகளை தீட்டிக்கொண்டு கதை கேட்ட அசின், கதையை உடனே ஓகே பண்ணி விட்டாராம். ஆனபோதும், சம்பள விவகாரத்தில்தான் அவர் இன்னும் மசியவில்லையாம். அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.