பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
“சீனிகம், பா” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பால்கி - அமிதாப் பச்சன் கூட்டணியில் மூன்றாவது படம், 'ராஞ்சனா' படத்தின் 100 கோடி வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இரண்டாவது ஹிந்திப் படம், கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் அறிமுகமாகும் படம், இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள படம், ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்த இளையராஜாவின் இசையில் வெளியான படம், என பல பெருமைகளை உள்ளடக்கி வெளிவந்த 'ஷமிதாப்' படத்தின் தோல்வி பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அமிதாப் பச்சன் என்றாலே அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமிருக்கும், அவர்கள் வந்து படத்தைப் பார்த்தால் கூட போதும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்காமல், 1500 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 25 கோடிக்கும் சற்று அதிகமாக மட்டுமே இந்தப் படம் வசூலித்திருக்கிறது என பாலிவுட் பிசினஸ்மேன்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவல். அதிலும் இந்தியாவில் மட்டும் 20 கோடி ரூபாய் அளவிற்குத்தான் வசூலாம். மல்டி பிளக்ஸ்களில் இருக்கும் 'ஏ' சென்டர் ரசிகர்களுக்கான படம் இது என்று சொல்லப்பட்டாலும் அவர்களும் திரையரங்கு பக்கமே வராதது ஏன் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
நம்ம ஊர்ப் பக்கமும் மீண்டும் ஒரு ஹிந்திப் படத்தை சில ரசிகர் கூட்டம் ஆஹா, ஓஹோவென்றது, அப்படியும் கூட படத்திற்கு திரையிட்ட, விளம்பரம் செய்த பணம் கூட கிடைக்கவில்லையாம். பாலிவுட்டில் சமீபத்தில் மிகப் பெரிய அதிர்ச்சிகரமான தோல்வி 'ஷமிதாப்' படம்தான் என்று பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் பேசிக் கொள்வதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.