'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் அது முடிந்தவுடன் கேரளா சென்று விடுகிறார் இனியா. காரணம் மலையாளத்தில் துளசிதாஸ் இயக்கத்தில் கேர்ளஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளத்தில் உருவாகிறது. அதே போல கன்னடத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இது ஹீரோயின் ஓரியண்ட் கதை. இப்படிப்பட்ட கதைகளைத்தான் சமீப காலமாக தேர்வு செய்து நடித்து வருகிறாம். அது சரி வைகை எக்ஸ்பிரஸ்க்கு ஏன் வரல டிக்கட் கிடைக்கலையா என்றால் அப்படியெல்லாம் கிடையாது. பூஜைக்கு வந்தால் பிரஸ் மீட் இருக்கும் எல்லாம் முடித்து விட்டு கிளம்ப ஒருநாள் முடிந்துவிடும். நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும். படங்கள் இல்லை என்றால் பரவாயில்லை. இரண்டு படங்களின் கால்ஷீட் பிஸியாக இருந்ததால் வரமுடியவில்லை என்கிறார். மலையாளம், கன்னடம் முடிந்ததும் இரண்டு தமிழ் படங்கள் கதை கேட்டுள்ளார் இனியா என்பது புது செய்தி.