ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
''ஐந்து ஐந்து ஐந்து'' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சைமன். அவரும் பின்னணி பாடகியும் தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆராக பணிபுரிபவருமான ஷீபாவும் நீண்ட நாள் காதலித்து வந்தனர். ஷீபா நினைத்தாலே இனிக்கும், கலகலப்பு உள்பட பல படங்களில் பாடியிருக்கிறார். சைமன் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இருவர் காதலுக்கும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சைமனும் ஷீபாவும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் இன்று (ஜன 16) மாலை 4.30 மணிக்கு லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்டி கிங் தேவாலயத்தில் நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.