'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பரத்பாலா இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தனுஷ், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த 'மரியான்' திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம். தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ஓரளவுக்கு நல்ல வசூலைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்து 'அனேகன்' படத்தையும் தெலுங்கில் வெளியிட உள்ளார்கள்.
இப்போது தனுஷின் முந்தைய படங்களையும் தூசி தட்டி எடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அதில் முதலில் 'மரியான்' படத்தை டப்பிங் செய்து வெளியிடும் பணியை ஆரம்பித்திருக்கிறார்களாம். ஏ.ஆர்.ரகுமான் இசை படத்திற்குப் பலம் என்பதால் அங்கு வியாபாரம் செய்வதற்கு நல்ல வசதியாக இருக்கும் என்று கருதுகிறார்களாம்.
தமிழிலேயே 'மரியான்' படம் தோல்வியடைந்தது. அப்படியிருக்க தெலுங்கில் படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது படம் வெளியானால்தான் தெரிய வரும்.