ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனராக அறிமுகமானபோதே மம்முட்டியை வைத்து 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக் பஸ்டரின் வெற்றியால் மலையாள சினிமாவை அதிரவைத்தவர் அன்வர் ரஷீத். தனது படத்துக்காக தேசிய விருது வாங்கிய இவர், ஒரு படத்தை தயாரித்தால் அதுவும் கூட சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பதை கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் நிரூபித்தார். இதோ இப்போது டைரக்சனை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு அடுத்த படத்தை தயாரிப்பதற்காக பூஜையையும் போட்டு, படபிடிப்பையும் துவக்கிவிட்டார்.
படத்தின் பெயர் 'பிரேமம்'.. படத்தை இயக்குவது 'நேரம்' புகழ் அல்போன்ஸ் புத்திரன்.. கதாநாயகன் அவரது கூட்டாளியான நிவின் பாலி தான். இதில் நிவினுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.. அல்போன்ஸ் புத்திரனின் முதல் அறிமுக நாயகியான நஸ்ரியா தொட்ட உயரம் நாம் அறிந்தது தானே..! சமீபத்தில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிசைனை வெளியிட்டார்கள்.. டிசைனை பார்த்தவர்கள் 'அட' என புருவம் உயர்த்தினார்கள்..
காரணம் “உலக சினிமா சரித்திரத்தில் புதுசாக எதுவுமில்லாத இரண்டாவது திரைப்படம்” என்கிற கிண்டலான டேக்லைனுடன் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் யாரையும் போடாமல் ஒரு வண்ணத்துப்பூச்சியின் அவுட் லைன் மட்டும் வரையப்பட்டிருந்ததும் மற்றவர்களின் வியப்பிற்கு இன்னொரு காரணம்.. அதனால் யாருய்யா இப்படி வித்தியாசமா போஸ்டர் டிசைன் பண்ணியது என ரசிகர்களின் விசாரிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றதாம்...!