‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இந்தியில் ஹிம்மத்வாலா படம் தமன்னாவை சறுக்கி விட்டபோதும், அதன்பிறகு அவர் நடித்த ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் போன்ற படங்கள் ஓரளவு வசூலித்தன. இருப்பினும், அதையடுத்து தமன்னாவை பாலிவுட் கண்டுகொள்ளவில்லை. அதனால் மறுபடியும் தென்னிந்திய சினிமாவை நம்பி வந்திறங்கிய தமன்னாவுக்கு, அஜீத்தின் வீரம் படம் கிடைத்தது பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. பின்னர், தெலுங்கில் பாகுபாலி, பெங்கால் டைகர் போன்ற படங்களை கைப்பற்றிய தமன்னா, தமிழில் ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, தற்போது புதிய வரவு நடிகைகள் சிலர் மார்க்கெட்டை பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமன்னாவும் தனது அபிமானிகள் சிலரது படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார். அந்தவகையில், சிறுத்தை, வீரம் படங்களில் தன்னை நடிக்க வைத்த சிவா அடுத்து அஜீத்தை இயக்கும் படத்தில் நடிக்கவும் தீவிரமாக முயற்சித்து வரும் தமன்னா, அவருக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தூது விட்டு வருகிறாராம்.