பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அட்டகத்தி படத்தில் நடித்தவர்கள் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்திற்கு முன்பே அவர்களும் இவர்களும் உள்பட சில படங்களில் நடித்திருந்தபோதும் அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு, அதே படத்தில் பெங்களூரில் இருந்து வந்த நந்திதா ஹீரோயினியாக நடித்தார். இருப்பினும், ஈகோ பார்க்காமல் நந்திதாவுடன் நட்பு வளர்த்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது வரை அவர்கள் இருவரும் நெருக்கமான தோழிகளாக உள்ளனர். இந்த நிலையில், சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவும், விஜயசேதுபதிக்கு ஜோடியாக நந்திதாவும் நடித்துளளனர்.
அப்படத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட காம்பினேஷன் சீன்கள் நிறைய உள்ளதாம். அதனால் அப்படி அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது, இருவரும் படப்பிடிப்பு தளத்தில் அடித்த அரட்டைக்கு அளவேயில்லையாம். அந்த அளவுக்கு டைரக்டர் ஆக்சன் சொல்வதைகூட் பொருட்படுத்தாமல் கேமரா முன்பு வந்தபோதும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டேயிருந்தார்களாம். இதனால் டைரக்டர் மட்டுமின்றி, படப்பிடிப்பு குழுவினரும் அவர்களின் செயலைப்பார்த்து வெறுத்துப்போனார்களாம்.