Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின் - கள்ளப்படம்

13 பிப், 2015 - 16:22 IST
எழுத்தின் அளவு:

முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் G க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது.


இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து பிசாசு படத்தின் வெற்றி தந்த உவகையில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின் தனது நெடு நாள் சிஷ்யர் வடிவேல் இயக்கும் 'கள்ளப்படம்' என்ற படத்தை Lone Wolf Productions சார்பில் வெளியிடுகிறார்.


நல்ல தரமான படைப்புகளுக்கு துணை நிற்க ஆயத்தமாகி வரும் Lone Wolf Productionsன் முதல் வெளியீடாக வருகிறது ' கள்ளப்படம் . “ நான் இந்த படத்தை பார்த்தேன். என்னை பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்.” என பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர் மிஷ்கின்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in