வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கோலிவுட் சினிமாவில் நெடுங்காலமாக நடிகராக இருப்பவர் டெல்லி கணேஷ். சிலர் மாதிரி சினிமாவில் நடித்தால் டி.வி. சீரியலில் நடிக்கமாட்டேன், விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறுபவர் கிடையாது. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுததக்கூடியவர். தற்போது மற்ற நடிகர்களைப் போல் தன் மகனை ஹீரோவாக களம் இறக்குகிறார். தயாரிப்பு டெல்லிகணேஷ். மதராசப்பட்டினம், சேவல், தெய்வத்திருமகள் என பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணகுமார் எழுதி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது சென்னை ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வரவு செலவு பற்றி கணக்கு பார்ப்பதை காட்டிலும் மகனின் நடிப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறார் டெல்லி. அதுமட்டுமில்லாமல் முன்னாள் நடிகர்களின் மகன்கள் இன்று நடிகராக முன்னேறிய பல விஷயங்கனை மகனுக்கு பாடம் எடுத்துள்ளார் என்பது விசேஷம்.