என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
வீரசேகரன் என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் வீரசமர். இவர் பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த அமலாபால். அதற்கு முன்பே விகடகவி என்ற படத்தில் அமலாபால் நடித்திருந்தபோதும், இந்த படம்தான் அவர் நடித்து தமிழில் முதன்முதலாக வெளியானது.
அதையடுத்து சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த வீரசமர், இப்போது மொக்கப்படம் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமிர்தா நடிக்க, மா.கா.பா. ஆனந்தும் ஒரு ரோலில் நடித்திருப்பதோடு ஒரு பாடலும் பின்னணி பாடியுள்ளார். ஜெயந்திநாதன் இயக்கியுள்ள இந்த படம் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பர்ஸட் காப்பி ரெடியாகி விட்டது.
அதனால், தற்போது கோடம்பாக்கத்திலுள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த சினிமா நபர்களை அழைத்து அவர்களுக்கு ஷோ போட்டுக்காட்டி வருகிறார்கள். அதோடு, படம் பார்த்த பிரபலங்களிடம் அதுபற்றி கருத்து கேட்டும் அதை வீடியோவில் பதிவு செய்து வருகிறார்கள். இதை படம் திரைககு வரும்போது பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தப்போகிறார்களாம்.