'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்னும் ஒரே மாதத்தில் கோடை வெயில் தாக்கப்போகிறது. அப்படி தாக்கும்போது குளிர்பான கம்பெனிகள் விளம்பரத்தை போட்டு இன்னொருபுறம் தாக்குவார்கள். டாப் ஹீரோக்களை வைத்து "நல்லா குடிங்க கூலாகுங்க" என்பார்கள். இந்த கோடையில் 7அப் குடிக்கச் சொல்லப்போகிறவர் தனுஷ். கடந்த ஆண்டும் அவர்தான் சொன்னார். அந்த விளம்பர படத்தை இயக்கியவர் ராஜீவ் மேனன்.
இந்த ஆண்டு தனுஷ் நடிக்கும் 7அப் விளம்பரத்தை இயக்க போகிறவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதற்காக தனது பாணியில் புதிய கான்செப்டை தயார் செய்து 7அப் நிறுவனத்திடம் கொடுத்து ஓகே வாங்கியிருக்கிறார். இது தனுஷிற்கும் பிடித்திருக்கிறது. இந்த கான்செப்ட் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, மற்றும் ஷமிதாப் படங்களை நினைவூட்டுவதாக இருக்கும் என்கிறது கவுதம்மேனன் வட்டாராம். படப்பிடிப்புக்கு உரிய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பெப்சி விளம்பரங்களை இயக்கி வருவதும் கவுதம்மேனன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.