Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை மாற்றிய 'ஷமிதாப்'

10 பிப், 2015 - 13:29 IST
எழுத்தின் அளவு:

ஒரு படத்தை எப்படி பிரமோஷன் செய்ய வேண்டும், எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை ஹிந்தித் திரையுலகத்தினரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். 'சென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் கூட நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் படங்களை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்று. சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் கூட அடிக்கடி கேரளா பக்கம் சென்றும் அவர்களது தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களை நிகழ்த்தி வருகிறார்கள். ஆனாலும், அஜித் போன்று தன்னுடைய படத்தைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


'ஷமிதாப்' படத்திற்காக தனுஷ் இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கும், வெளிநாடுகளிலும் அந்தப் படத்தின் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தன்னை ஒரு இந்திய நடிகராக வெளிக்காட்டிக் கொள்ள நிறையே பிரயத்தனப்பட்டார். ஆனால், அவரை வட இந்திய ஊடகங்கள் ஒரு தமிழ் நடிகராகவே பார்த்து வருகின்றன. இருந்தாலும் தனுஷின் நடிப்பும் படத்தில் மிரள வைத்துள்ளதால் பல 'கான்' நடிகர்களே மிரண்டு போயிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


'ஷமிதாப்' படத்தின் பிரமோஷன் யுத்தியையே தனுஷ் தற்போது அவர் நடித்து இந்த வாரம் வெளிவரவிருக்கும் 'அனேகன்' படத்திற்கும் பயன்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் கொச்சி சென்ற டீம், இன்று ஐதராபாத் சென்றுள்ளது. தெலுங்கில் 'அனேகன்' படம் 'அனேகடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது.


தொடர்ந்து அனைத்து மீடியாக்களுக்கும் தனுஷ் 'அனேகன்' படத்திற்காக இங்கும் பேட்டி தருவாரா என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள், மீடியாக்களுடன் சகஜமாகப் பேசிப் பழகி வந்த தனுஷ் தற்போது விலகியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in