பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் வஜ்ரம். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டியுடன் பவானிசிங் என்ற புதுமுகம் நடித்துள்ளார்.
தம்பி ராமைய்யா அநாதை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார். பள்ளி உள்ள இடத்தை அபகரிப்பதற்காக ஒரு அரசியல்வாதி பள்ளியை இடித்து தள்ளுகிறார். இதனால் படிப்பை இழந்தை பசங்க எப்படி அரசியல்வாதியிடமிருந்து பள்ளியை மீட்குறாங்க என்பதுதான் கதை.
இந்தப் படம் வருகிற 20ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இதில் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுகிற காட்சிகள் நிறைய இருக்கிறது என்று கூறி நிறைய கட்டுகளுடன் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள். இது கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் படம் என்று இயக்குனர் வாதாடிப் பார்த்தார். நோக்கம் சரிதான், ஆனால் ஆக்கம் சரியில்லையே என்று தணிக்கை குழுவினர் கைவிரித்து விட்டார்கள்.
இதனால் யூ சான்றிதழ் வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட காட்சிகளை மீண்டும் எடுக்க இருக்கிறார் ரமேஷ் செல்வன். படத்தின் பெரும்பகுதி அசாம் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அதை மேட்ச் பண்ணும் வகையில் அச்சன்கோவில் காடுகளில் படமாக்குகிறார்கள்.