ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன் சிம்பு நயன்தாரா வல்லவன் படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா, சூரி, சந்தானம் ஆகியோரும் நடிக்கிறார்கள். இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் சிம்புவின் தம்பி குறளரசன்.
சிம்பு - நயன்தாரா மறுபடியும் இணைந்து நடிப்பதால் இது நம்ம ஆளு படத்தை தொடங்கியபோது மிகவும் எதிர்பார்ப்பு நிலவியது. பிறகு படத்தை கிடப்பில் போட்டனர். எனவே இது நம்ம ஆளு என்ற படத்தையே மக்கள் மறந்திருந்தநிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியானது. 25 நாட்களில் இந்த டீஸரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
சிம்பு நடித்த படங்களிலேயே அதிகம் பேர் பார்த்த டீஸர் இதுதான். சிம்புவின் கேரியரில் இது சாதனைதான். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்களுக்குத்தான் அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அந்த லிஸ்டில் இப்போது சிம்புவும் சேர்ந்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்திலிருக்கிறார்கள். சிம்பு நடித்த வாலு மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி வாலு ரிலீஸ் ஆனால் ஏப்ரல் இறுதியில் இது நம்ம ஆளு படம் ரிலீஸாகும். ஒருவேளை வாலு ரிலீஸ் ஆகாமல் போனால் இது நம்ம ஆளு படத்துக்கும் சிக்கல்தான்.