பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உன்னைப்போல் ஒருவன் படத்தில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். அபியும் நானும், தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, சந்திரா உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தனியொருவன், அச்சாரம் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
கணேஷ் வெங்கட்ராமும், தமிழ் சேனல் ஒன்றில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் தௌரபதியாக நடித்து வரும் நிஷாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். ஒரு டி.வி.நிகழ்ச்சியில் நிகழ்ந்த சந்திப்பு நட்பாகி பின்பு காதல் ஆனது. இவர்கள் காதலுக்கு கணேஷ் வெங்கட்ராம் சைடில் லேசான எதிர்ப்பு இருந்தது. இதனால் இருவரும் தங்கள் காதலைப் பற்றி வெளியில் பேசிக் கொள்ளவில்லை. இப்போது இரு குடும்பத்தாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதால். திடீர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி விட்டனர். தாம்பரத்தில் உள்ள நிஷாவின் வீட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. திருமணம் வருகிற நவம்பர் மாதம் 22ந் தேதி நடக்கிறது.