பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
வடிவேலு காமெடி காட்சிகளில் இப்போதும் கோல்டன் காமெடியாக இருப்பது பிரபா ஒயின்ஸ் காமெடிதான். பிரபா ஒயின்ஷாப்புக்கு செல்லும் வடிவேலு கடை பூட்டப்பட்டபிறகும் உள்ளே உட்கார்ந்து சரக்கடித்துக்கொண்டே வீட்டில் மனைவியுடன் இருக்கும் பிரபா ஒயின்ஸ் ஓனர் செல்லத்துரையை போனில் கூப்பிட்டு "ஹலோ பிரபா ஒயின்ஸ் ஒணருங்களா கடைய எப்ப திறப்பீங்க?" என்று கேட்டு பண்ணும் டார்ச்சர் நான் ஸ்டாப் காமெடி.
அதில் நடித்த செல்லத்துரை நேற்று (ஜன 7) காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில வருடங்களாக சர்க்கரை வியாதியால் அவஸ்தைப்பட்டு வந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.