ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீப காலமாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கோடியில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரி குவிப்பதால் நடிகர் - நடிகை மற்றும் இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் வெகுவாக கூடியிருக்கிறது. 3 இடியட்ஸ், தபாங் ஆகியவை மிகப் பெரிய அளவிலான ஹிட் படங்களாக அமைந்ததோடு மிகப் பெரிய வருவாயையும் ஈட்டிக் கொடுத்துள்ளது. 8 மாதகாலத்திற்குள் இந்த இரு படங்களும் ரூ. 100 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டித் தள்ளியுள்ளதால் பாலிவுட் பெரும் உற்சாகமடைந்துள்ளது, பணமும் பெருமளவில் புழங்கத் தொடங்கியுள்ளதாம்.
நடிகர்களைப் பொறுத்தவரை சல்மான் கான் ரூ. 21 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆமிர்கான், ஷாருக்கான் இதில் பின்தங்கியுள்ளனர். ஆமிர்கான் தனது 3 இடியட்ஸ் படத்தின் லாபத்தில் ஒரு பங்கைப் பெற்றார். அதுவே ரூ. 50 கோடி என்கிறார்கள். ஷாருக்கான் தற்போது தனது சொந்தத் தயாரிப்பில் ஆர்ஏ ஒன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வரும் வருமானம் முழுவதும் அவருக்கே போய் விடும்.
நடிகைகளைப் பொறுத்தவரை கரீனா கபூர்தான் நம்பர் ஒன் சம்பள நடிகை. ஏஜென்ட் வினோத் படத்திற்கும், பாடிகார்ட் படத்திற்கும் அவர் பெற்ற சம்பளம் ரூ. 4 கோடி. காத்ரீனா கைப் ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார். சைப் அலி கான் ரூ. 13 கோடி சம்பளம் வாங்குகிறார். ஷாஹித் கபூருக்கு ரூ. 8 முதல் 9 கோடி வரையில் சம்பளம் உள்ளது. முன்னணி இயக்குநர்களுக்கும் பெருமளவில் சம்பளம் தருகிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் குஸாரிஸ் படத்துக்காக. ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் கூட போதும், அந்த இயக்குநருக்கு குறைந்தது ரூ. 9 கோடி சம்பளம் தருகிறார்களாம்.