அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நடிகையான ரம்யா நம்பீசன், பீட்சா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டவர்.
மேடை கச்சேரிகளும் செய்திருக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் பாடி வருகிறார். தட்டயன் மரத்து படத்தில் ரம்யா பாடிய "முத்துசிப்பி போலொரு..." என்ற பாடலுக்கு விருதுகள் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு படங்களுக்கு பாடினார். தமிழில் பாண்டியநாடு படத்தில் "பை பை கலாசி பை..." பாடினார். அது பாப்புலராகவே தற்போது சாகசம் படத்தில் சிம்புவுடன் பாடியிருக்கிறார். அடுத்ததாக கன்னடத்திலும் பாடி இருக்கிறார்.
பாண்டிய நாடு படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அதில் பை பை கலாசி பை பாடலை. "டிரை டிரை..." என்று பாடியிருக்கிறார். படம் ரிலீசுக்கு முன்பே அங்கும் பாட்டு ஹிட். எனவே கன்னடத்தில் பாடும் வாய்ப்புகள் குவிகிறது ரம்யாவுக்கு.