தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யார் ராஜேஷ்.. அவரோட பிள்ளை யார்.. அவர் ஏன் பூர்ணாவை ஏமாற்றினார் என விஷயத்தை துண்டுதுண்டாக பிரித்து பார்த்தால் கொஞ்சம் வயலன்ட்டாகத்தான் தோன்றும்.. ஆனால் விஷயம் அந்த அளவுக்கெல்லாம் சீரியசானது இல்லை.. மலையாளத்தில் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் இந்த ராஜேஷ் பிள்ளை.. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
நிவின்பாலி, அமலாபால் நடித்திருந்த இந்தப்படத்தில் பூர்ணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியானபின்னர் தியேட்டருக்கு சென்று பார்த்த பூர்ணாவுக்கு ஷாக்கோ ஷாக்.. காரணம் அவர் நடித்த நிறைய காட்சிகளை எடிட்டர் சாப்பிட்டு விட்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, கதையில் அவரது கேரக்டருக்கே முக்கியத்துவம் இல்லாத வகையில் செய்துவிட்டார்களாம். அதனால் இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்னபடி தனது கேரக்டரை காட்டாமல் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று என தற்போது குமுறுகிறார் பூர்ணா..