'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடித்துள்ள புறம்போக்கு படத்தின் டிரைலர் நேற்றைய முன்தினம் அதாவது பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. புறம்போக்கு டிரைலர் அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது என்ற பாராட்டைப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல டிரைலர் வெளியாகி இரண்டே நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புறம்போக்கு டிரைலரை பார்த்து ரசித்தள்ளனர்.
புறம்போக்கு படத்தில் பாலு என்கிற தூக்குதண்டனை கைதியாக ஆர்யா நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக ஷாம் நடித்துள்ளார். விஜய்சேதுபதி ஜாலியான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். புறம்போக்கு படத்தின் பெரும்பாலான வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சில நாட்கள் மட்டுமே போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிச்சம் இருக்கிறது. அவற்றை முடித்து இந்த மாத இறுதிக்குள் படத்தை சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.புதிய இசையமைப்பாளர் வர்ஷன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கி உள்ளது.
விரைவில் புறம்போக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைபிரம்மா்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் ஏப்ரல் முதல் வாரம் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். எஸ்.பி.ஜனநாதனின் பினாரி பிக்சர்ஸும், யுடிவி நிறுவனமும் புறம்போக்கு படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இந்தியாவின் பல மாநிலங்களில் இப்படம் உருவாகி உள்ளது.