Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமிக்கு தாரைத்தப்பட்டை கொடுத்த நம்பிக்கை!

06 பிப், 2015 - 10:18 IST
எழுத்தின் அளவு:

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, மேற்கத்திய நடனங்களை நன்கு அறிந்தவர். முக்கியமாக பாலே நடனம் அவருக்கு அத்துபடியாம். அவரது நடன திறமைக்காகத்தான் சிம்புவின் போடா போடி படத்தில அவர் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். அதோடு, அந்த முதல் படத்திலேயே கவர்ச்சி காட்சிகளிலும் துணிச்சலாக நடித்த வரலட்சுமி அதற்கடுத்து விஷாலுடன் நடித்த மதகஜராஜா தனக்கு கமர்சியல் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் கிடப்பிலேயே கிடக்கிறது.


இந்த நிலையில், தற்போது தாரைதப்பட்டை படத்திலும் அவருக்கு நடனம் தெரியும் என்பதாலேயே புக் பண்ணிய பாலா, கரகாட்ட பயிற்சியையும் கொடுத்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். மேலும, எந்த வகை நடனமாக இருந்தாலும் அதை உள்வாங்கிக்கொண்டு தனது பாணியில் வித்தியாசப்படுத்தி ஆடிக்காட்டக்கூடிய திறமை பெற்ற வரலட்சுமி, கரகாட்டத்தை பரம்பரையாக கரகாட்டமாடுபவர்களையே மிஞ்சும் வகையிலும் சில வித்தியாசமான அசைவுகளை தனது பாணியில் கொடுத்து வருகிறாராம்.


அதைபப்பார்த்து, பாலா, சசிகுமார் உள்பட அனைவரும் அசந்து போயிருக்கிறார்களாம். அதனால், நடனத்தில் தான் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தபோதும, அது இன்னமும் ரசிகர்களை சரியாக சென்றடையவில்லையே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த வரலட்சுமி, இந்த தாரை தப்பட்டை படம் தனது நடன திறமையை முழுசாக வெளிக்கொண்டு வந்து தனனை ரசிகர்களிடமும் முழுசாக கொண்டு சேர்த்து விடும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in