ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது படத்திற்கு பிறகு அதே டீம் இணைந்து உருவாக்கும் படத்திற்கு சிகண்டி என்று பெயர் வைத்திருந்தார்கள். இது மகாபாரதத்தில் வரும் ஒரு கேரக்டரின் பெயர். தற்போது இந்த தலைப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். ''கற்கை நன்றே'' என்ற தலைப்பை முடிவு செய்து பதிவு செய்திருக்கிறார்கள். என்றாலும் தூங்காதே தம்பி தூங்காதே என்ற டைட்டில் பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.
கமல் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது. தலைப்பை பயன்படுத்திக் கொள்ள ஏவிஎம் நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். ஏவிஎம் நிறுவனம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏவிஎம் அனுமதி தந்தால் அந்த தலைப்பு வைக்கப்படும், இல்லாவிட்டால் புதிய தலைப்பு வைக்கப்படும் என்று தெரிகிறது. கல்வி பற்றிய படம் என்பதால பொருத்தமான தலைப்பை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு துவங்குகிறது.