பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இன்றைய தினம் உலகமெங்கும் உள்ள 'தல' ரசிகர்களுக்கு கோலாகலமான திருவிழாதான். வீரம் படம் வெளியாகி ஒரு வருட இடைவெளிக்குப்பின் என்னை அறிந்தால் இன்று வெளியாகிறது.. இன்று கேரளாவின் இந்தப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலுமே முதல் காட்சியை ஒரே யூனிபார்மாக காலை 7.3௦ மணிக்கே ஆரம்பித்திருக்கிறார்கள். கேரளாவில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள கே.ஜி.நாயர் இந்தமுறை 17௦ தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். இதற்கு முந்தைய அஜித்தின் படங்களான மங்காத்தா (75), பில்லா-2 (1௦3), ஆரம்பம் (145), வீரம் (11௦) என்கிற அளவிலேயே ரிலீஸ் ஆகியிருந்தன.
இதில் 'ஆரம்பம்' அதிக தியேட்டர்களிலும், அதன் பின் வெளியான 'வீரம்' குறைந்த தியேட்டர்களில் வெளியானதற்கு காரணம் 'வீரம்' படத்துடன் விஜய்-மோகன்லால்' காம்பினேஷனில் உருவான 'ஜில்லா'வும் அதே நாளில் வெளியானது தான். ஆனால் இப்போது சோலோ ரிலீஸ் என்கிற வகையில், எந்த விஷேச நாளும் இல்லாமல் 'என்னை அறிந்தால்' வெளியாகி இருப்பதால் நிறைய தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் இதற்கு முன் கேரளாவில் 'கத்தி' 2௦௦ தியேட்டர்களிலும், 'ஐ' 22௦ தியேட்டர்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.