ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமலாபால் அறிமுகமான தமிழ்ப் படம் என்றால் “விகடகவி, சிந்து சமவெளி, வீரசேகரன்” ஆகிய மூன்று படங்களையும் சேர்த்துத்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 'மைனா' படம்தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம். அதன் பின் 'தெய்வத் திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகினார். இருந்தாலும் தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடித்து வெளிவந்த 'மிலி' படம் கூட பலரின் பாராட்டுதல்களைப் பெற்றது. தமிழில் எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது பாண்டிராஜ் சிறுவர்களை மையமாக வைத்து இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சூர்யாவும் படம் முழுவதும் வரவில்லை என்றாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அமலா பால், சூர்யா ஜோடியாக நடிப்பதையும் இயக்குனர் பாண்டிராஜ் உறுதி செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிம்பு, நயன்தாரா நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படத்தையும் இயக்கி வரும் பாண்டிராஜ், இந்தப் படத்தின் தயாரிப்பில் சிறிது இடைவெளி விழுந்த போது சூர்யா தயாரிப்பில் உருவாகும் படத்தையும் இயக்க ஆரம்பித்து விட்டார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
முன்பெல்லாம் ஒரு ஹீரோயினுக்கு திருமணமானால் பெரிதாக வாய்ப்புகளை அளிக்க மாட்டார்கள். அந்த டிரெண்டும் தற்போது மாறி வருகிறது.