தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பலமுறை தேசியவிருதுகளை சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கும் ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவரோ ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த 2011ல் சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி' படம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் துப்பாக்கி, அஞ்சான் என ஒளிப்பதிவாளராக தலைகாட்டியவர் தற்போது இந்தியில் எம்.எஸ்.தோனி என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். கடந்த வருடம் இவர் இயக்கிய 'இனம்' படம் தமிழகத்தில் சர்ச்சைகளை கிளப்பியது. அதற்கேற்ற மாதிரி இன்னும் ஒரு படத்தை இயக்கிவிட்டு அதன் பின் டைரக்சனுக்கு குட்பை சொல்லவிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார் சந்தோஷ் சிவன். இப்போது தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்தும் விட்டார். கதாநாயகனாக நிவின் பாலி நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.