'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாக பிருத்விராஜ் பத்து படங்கள் நடித்தால் அதில் மூன்று படங்களில் கட்டாயம் போலீசாகத்தான் நடிப்பார்.. ஆனால் மீதி ஏழு படங்களை விதவிதமான கேரக்டர்களுக்கு ஒதுக்கிவிடுவார். கடந்த வருடம் வெளியான 'தி செவன்த் டே' படத்தில் கொள்ளையடிக்கும் பணத்தை கண்டுபிடிக்கும் அதிகாரியாக நடித்திருந்தார். அதேசமயம் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' படத்தில் பணத்தை திட்டம்போட்டு கொள்ளையடிப்பவராக நடித்திருந்தார்.. பரிசோதனை முயற்சிகளுக்கு பிருத்விராஜ் எப்போதும் மறுப்பு தெரிவிப்பதேயில்லை.. அந்த வகையில் தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் 'அனார்கலி' படத்தில் கூட, அவர் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். 'அனார்கலி' என்றதுமே காதல் காவியம் என்றெல்லாம் கற்பனையை அலையவிடாதீர்கள்.. காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.