ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
'ஏபிசிடி' படத்தில் துல்கர் சல்மானோடு சேர்ந்து காமெடியில் அதகளம் பண்ணியவர் ஜேக்கப் கிரிகேரி.. அப்படியே துல்கருடன் இன்னொரு படமான 'சலாலா மொபைல்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். அதேபோல 1983' படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் சச்சின் என பெயர் வைத்துக்கொண்டு தனது சேஷ்டைகளால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக செத்துக்கிடக்கும் காகத்தை பார்த்து, இந்த ஊர்ல சாகுற காக்காய்கள் எல்லாம் ஷாக் அடிச்சுத்தான் சாகுதுங்க.. அப்படின்னா வயசாகி சாகுற காக்காய்கள்லாம் எங்க போய் சாகும் என செந்தில்தனமான கேள்வியை கேட்டு அசரவைப்பார். படிப்படியாக காமெடியில் முன்னேறி வரும் ஜேக்கப்பிறகு ஜாக்பாட் அடித்தது போல மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருகிறது.