தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு பரபரப்பிற்காக காவ்யா மாதவன் கர்ப்பம் என்றோ அல்லது கர்ப்பிணியானார் காவ்யா மாதவன் என்றோ இந்த செய்திக்கு தலைப்பு வைப்பது நியாயமாகாது என்றுதான் நியாயமான தலைப்பை வைத்துள்ளோம்.. மலையாள சினிமாவில் கர்ப்பிணிகளை மையப்படுத்தி கதைபின்னுவது கூட ஒரு ட்ரெண்ட்டாகத்தான் இருக்கிறது. அதேபோல பிரபல கதாநாயகிகளும் கர்ப்பிணிகளாக நடிப்பதற்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை என்பதுதான் இதில் ஹைலைட்...
களிமண்னு படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக ஸ்வேதா மேனன் நடித்திருந்தார். அதில் மேனனின் நிஜ பிரசவக்காட்சியை படமாக்கி, படத்தில் இணைத்து ரசிகர்களை அதிரவைத்தார்கள்.. இது கேரளாவில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் அளவுக்கெல்லாம் போனது.. அடுத்து ஐந்து கர்ப்பிணிகளையும் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கும் ஒரு மகப்பேறு மருத்துவரையும் சுற்றி பின்னப்பட்ட 'சச்சாரியாயுடே கர்ப்பிணிகள்'படத்தில் கர்ப்பிணிகளாக ரீமா கல்லிங்கல், ஆஷா சரத், சனுஷா, கீதா, சாண்ட்ரா ஆகிய ஐந்து பேர்களும் நடித்திருந்தார்கள்.