ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முகுந்தா திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான நடிகர் வருண் தேஜ், தற்போது அவரது இரண்டாவது படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கத்தில் தான் இவரது அடுத்த படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பு வருண் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என செய்திகள் வெளியாகின தற்போது கிரிஷ் ஜகர்லாமுடி தான் இவரது அடுத்த இயக்குநர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை உஷா கிரோன் மூவிஸ் சார்பில் ராமோஜி ராவ் முதல் முறையாக கிரிஷ் ஜகர்லாமுடியுடன் இணைகிறார். தற்போது இப்படத்திற்கான நடிகையை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம். இயக்குநர் கிரிஷ் தற்போது கப்பர் என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் அக்ஷய் குமார், கரீனா கபூர், ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்கள். இப்படத்தை முடித்த கையோடு வருணுடன் கைகோர்க்கும் கிரிஷ் இப்படத்தை தனது பெஸ்ட் படமாக உருவாக்கவிருக்கிறாராம்.