ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை, நடிகர் அமிதாப் பச்சன் கிரிக்கெட் வர்ணனை செய்ய உள்ளார்.
இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஷமிதாப். இந்தபடம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, படக்குழுவினர், நாட்டின் பல்வேறு இடங்களில், புரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, விரைவில் துவங்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் தொடரையும், தங்களது பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு பயன்படுத்த ஆயத்தமாகி விட்டனர்.
இதற்காக, ஷமிதாப் படக்குழுவினர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். இதன்படி, வரும் பிப்ரவரி 15ம் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை, நடிகர் அமிதாப் பச்சன் செய்ய உள்ளார்.