இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவை பொறுத்தவரை மிக வசதியான அரண்மனை போன்ற வீட்டில் உள்ள பெண்களை 'தம்புராட்டி' என அழைப்பது வழக்கம்.. இப்போது அப்படி ஒரு 'ஹேமா தம்புராட்டி'யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்' நிக்கி கல்ராணி.. இது மலையாளத்தில் அவர் தற்போது நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்திற்காக ஏற்றிருக்கும் கேரக்டர் தான்.. சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சிபு கங்காதரன் என்பவர் இயக்குகிறார்.
இருப்பினும் இது ஒரு ஹீரோயினுக்கு வெயிட் கொடுக்கக்கூடிய சப்ஜெக்ட்டாக உருவாவதாலோ என்னவோ, நிக்கியின் கேரக்டருக்காக அவரது எடையை கொஞ்சம் கூட்ட சொன்னாராம் இயக்குனர்.. நிக்கியும் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. கொஞ்ச நாளில் பூசின மாதிரி வந்து நின்றாராம்.
ஆனால் எவ்வளவு எடை கூடியிருக்கிறோம் என்பதை செக் பண்ண, நிக்கிக்கு விருப்பம் இல்லையாம்.. அது தெரிந்தால் பயம் வந்துவிடுமாம். அதேபோல நிக்கி நடித்த '1983' படம் போலவே, இதிலும் துளிகூட கவர்ச்சிக்கு வேலை வைக்காத கேரக்டராம். அதனால் படம் முழுக்க தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, அதிலும் பிளைன் காட்டன் புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருக்கிறாராம்.