Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தப்படம் எது?

31 ஜன, 2015 - 12:53 IST
எழுத்தின் அளவு:

எஸ்.ஜே.சூர்யா இயக்கி தயாரித்து இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் இசை படம் கடந்த இரண்டு வருடங்களாக முடங்கிக்கிடந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது இசை படம். மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடுவதால் முன்பாதியில் பொறுமையை சோதிப்பதாகவும், கடைசி முப்பது நிமிடத்தில் மிரட்டிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா என்றும் ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய சாத்தியம் அதிகமிருப்பதாக சொல்லப்படுகிறது.


இதற்கு முன் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய முகம் காட்டினார்.


எஸ்.ஜே.சூர்யாவுக்கு இயல்பிலேயே இசைஞானம் அதிகம் உண்டு. இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே நடக்கும் ஈகோ மோதல்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இசை படத்துக்கு இசை அமைத்ததன் மூலம், அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி இசை படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.


அது சரி..இசை படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தப்படம் எது?


இசை படத்தின் புரோமேஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா பேசும்போது குறிப்பிட்ட ஒரு விஷயத்தையே இதற்கான பதிலாக எடுத்துக்கொள்ளலாம். என் இயக்கத்தில் விஜய் நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், இசை படத்தின் ஆடியோ விழாவிற்கு நான் அழைத்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமாக வந்திருந்து ஆடியோவை வெளியிட்டார். இத்தனை உயரங்களுக்கு சென்றபிறகும் அவரின் இந்த எளிமை வியக்க வைக்கிறது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! என்று விஜய் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in